ஆறு எனப்பொதுப்பட நிற்றலான் வரைபொருட் பிரிவின் கண் செல்லும் நெறி பற்றிய இடையுறு கிளவியும் கொள்க. |
| எ - டு : | குருதி வேட்கை உருகெழு வயமான் |
| வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் |
| மரம்பயில் சோலை மலியப் பூழியர் |
| உருவத் துருவின் நாண்மே யலாரும் |
| மாரி எண்கின் மலைச்சுர நீளிடை |
| நீநயந்து வருதல்என் எனப்பல புலந்து |
| அழுதனை உறையும் அம்மா அரிவை! |
| பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் |
| பூதம் புணர்த்த புதிதுஇயல் பாவை |
| விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின் |
| ஆய்நலன் உள்ளிவரின் எமக்கு |
| ஏம மாகும் மலைமுத லாறே |
(நற்-192) |
எனவரும். |
அவ்வினைக்கியல்பே என்பது : களவின்கண் தலைமகன் ஒழுகும் ஒழுகலாற்றிற்குரிய இலக்கணமாகும் என்றவாறு. |
பண்பிற் பெயர்த்தல் முதலாகிய இவ்வைந்தும் பாங்கன், பாங்கி இருவர் மாட்டும் நிகழ்தற்கு ஒத்தும், மூவகைப் புணாச்சிக்கும் பொதுவாயும் தலைவன் கூற்றிற்கு ஒழிபாக அமைந்து வருதலான் இவற்றைப் பிரித்து ஓதினார் என்க. இவை தலைவன் கூற்று நிகழுமிடம் பற்றி மேற்கூறிய கிளவிகளின் வேறானவையல்ல. இவை ஏதுவாக அவை நிகழும் என்பது விளங்க "அன்னவும் உளவே" என்றாற் போலக் கூறாமல் "அவ்வினைக் கியல்பே" என்று கூறினார் என அறிக. |
சூ. 105 : | பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப |
(13) |
க - து : | களவொழுக்கத்தின்கண் தலைவற்குரியவென மேற்கூறிய கிளவிகளுள் பாங்கர் (பாங்கன் - தோழி) கூட்டத்திற்குரியவை இத்துணை எனவும் அவை அவ் இருவகைக் கூட்டத்திற்கும் ஏதுக்களாம் எனவும் கூறுகின்றது. |
பொருள்: மெய்தொட்டுப் பயிறல் முதல் மடன்மா கூறுதல் இறுதியாக மேற்கூறப்பட்ட கிளவிகளுள் பாங்கராற் கூடும் இருவகைக் கூட்டத்திற்கும் நிமித்தமாக நிகழும் கிளவிகள் பன்னிரண்டு எனக்கூறுவர் நூலோர். |