பெயரால் பதிப்பித்துள்ள வெள்ளைவாரணனார் ஒவ்வொரு நூற்பாவிற்கும் தாம் வரைந்துள்ள ஆய்வுரை இளம்பூரணர் உரையை முற்றப் பயின்ற நச்சினார்க்கினியர் அவர் கருத்தை விடுத்துத் தாம் புதியனவாக உரை வரைந்துள்ள இடங்களில் அவர் அவ்வாறு வரைந்ததற்குரிய அடிப்படைக் காரணத்தை ஆராய முற்படாது பல இடங்களிலும் நச்சினார்க்கினியர் உரை வலிந்துரையாதலின் ஆசிரியர் கருத்துக்கு முரணானது என்ற ஒரே செய்தியைக் குறிப்பிடுவதனையும், பெரும்பாலும் இளம்பூரணர் உரையையே எடுத்துச் சொல்வதனையும், ஒரோவழி இருவருரையும் பொருந்தா என்று புத்துரை வழங்குவதனையும் காண்கிறோம். அப் புத்துரைகளில் பொருந்தாதன இக்காண்டிகை உரையாளரால் ஆங்காங்குக் காரணங்களுடன் மறுக்கப்பட்டுள்ளன. |