44களவியல்
எ - டு :

இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக்

கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல்

எம்மினும் உயவுதி செந்தலை அன்றில்

கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ

நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே

(நச்-மேற்)
 

எனவரும்.
 

2) காணா   வகையிற்   பொழுதுநனி  இகப்பினும்  என்பது; தலைவன்
குறியிடத்திற்கு வர இடையூறு நேர்ந்த வழி  இற்றை  ஞான்று தலைவனைக்
காணல்   அரிதென   வருந்தும்  மிக்க   பொழுது  நீண்டு கழியுமிடத்தும்
என்றவாறு.
 

தலைவன் வருதற்கிடையூறாவன : நாய்குரைத்தலும்,  ஊர்துஞ்சாமையும்,
காவலர்கடுகலும்,   நிலவு  வெளிப்படலும்,  கூகை  குழறலும்,  கோழிகுரல்
காட்டலும் பிறவுமாம்.
 

எ - டு :

இரும்பிழி மகாஅர்இவ் அழுங்கல் மூதூர்

விழவின் றாயினும் துஞ்சா தாகும்

மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்

வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்

பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்

இலங்குவே லிளையர் துஞ்சின் வைஎயிற்று

வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்

அரவவாய் ஞமலி குரையாது மடியின்

பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்

அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே

திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்வசி வளைவாய்க் கூகை

கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்

வளைக்கண் சேவல் வாளாது மடியின்

மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்

எல்லாம் மடிந்த காலை ஒருநாள்

நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனான்

அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து

ஆதி போகிய பாய்பரி நன்மா

நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்

கன்முதிர் புறங்காட் டன்ன

பல்முட்டின்றால் தோழி நங்களவே

(அகம்-122)
 

எனவரும்.