46களவியல்
எ - டு :

நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்

நுணங்குமண லாங்கண் உணங்கப் பெய்ம்மார்

பறிகொள் கொள்ளையர் மறுக உக்க

மீனார் குருகின் கானலம் பெருந்துறை

எல்லை தண்பொழில் சென்றென செலீஇயர்

தேர்பூட் டயர ஏஎய் வார்கோல்

செறிதொடி திருத்தி பாறுமயிர் நீவி

செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச்

சொல்லிய அளவைத் தான்பெரிது கலுழ்ந்து

தீங்கா யினள்இவ ளாயின் தாங்காது

நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்

பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனால்

சேணின் வருநர் போலப் பேணா

இருங்கலி யாணர் எம்சிறுகுடித் தோன்றின்

வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்

துறையும் மான்றன்று பொழுதே சுறவும்

ஓதம் மல்கலின் மாறா யினவே

எல்லின்று தோன்றல் செல்லா தீமென

எமர்குறை கூறத் தங்கி ஏமுற

இளையரும் புரவியும் இன்புற நீயும்

இல்லுறை நல்விருந் தயர்தல்

ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே

(அகம்-300)
 

எனவரும்.
 

விருந்தினானும்   எனப்பாடங்    கொண்டு   அதற்கேற்ப  உரைப்பார்
நச்சினார்க்கினியர்.
 

6) தாளாண்   எதிரும்   பிரிவி னானும் என்பது : தாளாண்மை புரியும்
பொருட்டுத் தலைவற்குப் பிரிவு நேர்ந்தவிடத்தும் என்றவாறு.
 

''வெளிப்படைத் தானே கற்பினொ டொப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக

வரையாது பிரிதல் கிழவோற் கில்லை'' (சூ-51) என்றதனான்
 

தலைவன்  வரைந்தல்லது  பகைவயிற்   பிரிதல்  மரபன்மையான் இது
பகைவர்   மண்ண சையுற்றும்  மைந்து பொருளாகவும் வலிந்து போரொடு
வந்தவிடத்து அவரை அடர்த்தொடுக்குதலைக் கருதிப் பிரியும்   பிரிவெனக்
கொள்க. இப்பிரிவு அந்தணர் ஒழிந்த மூவர்க்கும் ஏற்கும்.