48களவியல்

எஞ்சாது, எல்லா, கொடுமை நுவலாதி

அஞ்சுவது அஞ்சா அறனிலி யல்லன்என்

நெஞ்சம் பிணிக்கொண்டவன்"
 

என மறுத்து இயற்பட மொழிந்தவாறு கண்டுகொள்க.
 

அருவி வேட்கைப் பெருமலை நாடற்கு

யான்எவன் செய்கோ என்றி யானது

நகையென உணரே னாயின்

என்னா குவைகொல் நன்னுதல் நீயே

(குறு-96)
 

என்பதுமது.
 

9) வரைவுடம்   படுதலும்   என்பது  :  தலைவற்குத்  தமர்   வரைவு
நேர்ந்தவிடத்தும் என்றவாறு. இது  தன்னானும்  தோழியானும்  அறிந்தவழி
நிகழும்.
 

எ - டு :

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்

தமியர் உறங்கும் கௌவை யின்றாய்

இனியது கேட்டின் புறுகவிவ் வூரே

முனாஅது யானையங் குருகின் கானலம் பெருந்தோடு

அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்

குட்டுவன் மாந்தை யன்னவெம்

குழைவிளங்கு ஆய்நுதற் கிழவனு மவனே.

(குறு-34)
 

10) ஆங்கதன்   புறத்துப்   புரைபட  வந்த  மறுத்தலொடு தொகைஇக்
கிழவோள்   மேன  என்மனார்  புலவர் = ஆங்குத் தமர் வரைவு நேர்தல்
தலைவற்குப்  புறத்ததாய  வழித்   தனது  கற்பும் இற்பிறப்புமாகிய உயர்வு
விளங்குமாறு  தோன்றி,  வந்த  பிறர் வரைவினை  மறுத்துக்  கூறுதலாகிய
கிளவியொடு  கூடி  நிகழும்  கிளவிகள்  எல்லாம் களவொழுக்கத்தின்கண்
தலைவியிடத்தனவாம் எனக் கூறுவர் புலவர்.
  

'ஆங்கதன்   புறத்து'   என்றது  நொதுமலர் வரைவு  கருதி வருதலை.
புரை = உயர்வு.  அஃது   ஈண்டுத்   தலைவியின்  கடைப்பிடியைச் சுட்டி
நின்றது.
 

எ - டு :

பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை

சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்

செருவுறு குதிரையின் பொங்கிச் சாரல்

இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்

பெருவரை அதடுக்கத்துக் கிழவோன் என்றும்

அன்றை யன்ன நட்பினன்

புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே.

(குறு-385)
 

எனவரும்.