60களவியல்

நாலிரண்டு   வகையிற்   பெருமை  சான்ற  இயல்பின் கண்ணும் என்பது :
பாலது ஆணையாற் கூட்டப்பெற்ற இயற்கைப் புணர்ச்சியான்   தலைவியின்
கண்   நிகழாநிற்கும்  ஒழுகலாற்றினைக்  கண்டு,  தான்  அவள்  என்னும்
வேறுபாடின்றி ஒன்றுபட்ட   கேண்மையினானே   அவளுற்ற  குறையினை
நுணுகியுணர்ந்த   தோழி  மதியுடம்பட்ட  அருமைப்பாடு  நிறைந்த  எண்
வகையாற் பெருமை மிக்க இயல்பின் கண்ணும் என்றவாறு.
 

என்றது : தலைவியது  நடைமுறை  வேறுபாட்டினை  நோக்கிக்  கண்ட
தோழி  முன்னுற   உணர்தல்  என்னும்   வகையான்    மதியுடம்படுதற்கு
மேற்கொண்ட  நாற்றம், தோற்றம்,  ஒழுக்கம், உண்டி, செய்வினை மறைப்பு,
செலவு, பயில்வு   ஆகிய   உணர்வுகளான்   தலைவனொடு தலைவிக்குப்
புணர்ச்சியுண்மையறிந்து மெய்யினும்  பொய்யினும்  வழிநிலை  பிழையாமல்
பல்வேறு கவர் பொருள்களான்   ஆராயுமிடத்துத்  தலைவி  தோழியொடு
கூற்று    நிகழ்த்தும்   என்பதாம். பொறி = ஊழ்.  முன்னர் 'ஒன்றியுயர்ந்த
பாலதாணை' என்றதனை ஈண்டுப் "பொறியின்  யாத்த  புணர்ச்சி" என்றார்.
"தெரிந்தோள்" எனத்  தோழியை  வினையாலணையும்  பெயராற் கூறினார்.
தலைவிக்குத் தோழிக்கும் உரிய ஒருமைக்கேண்மையைத் ''தாயத்தினடையா
ஈயச்செல்லா'' (பொருளி - 25) என்னும் சூத்திரவிதியானறிக.
 

நாலிரண்டுவகை  என்றது : தோழி   மதியுடம்பாட்டிற்குரிய  மூன்றனுள்
முன்னுறவுணர்தலின்    கூறுகளாகிய    நாற்றம்    முதலாகப்   பல்வேறு
கவர்பொருள் கூறிநாடுதல் ஈறாகத் தோழி கூற்றினுள் ஓதப்படும் எட்டுமாம்.
அவ் ஆராய்ச்சி வழிநிலை பிழையாது நிகழும் நுண்மைத்தாகலின் 'அருமை
சான்ற' என்றார்.  முன்னுறவுணர்தல்  என்னும்  இலக்கணத்தான்  புணர்ச்சி
உண்மையைத்   தோழி   தெளிந்து  கோடல்  தோழியிற்  கூட்டத்திற்கும்
அறத்தொடு  நிற்றற்கும்  துணைபுரிதலான்  அவற்றைப்  'பெருமை  சான்ற
இயல்பு' என விளம்பினார்.
 

எ - டு :

பையுள் மாலைப் பழுமரம் படரிய

நொவ்வுப் பறைவாவல் நோன்சிற கேய்க்கும்

மடிசெவிக் குழவி தழீஇப் பெயர்தந்து

இடுகுகவுள் மடப்பிடி எவ்வங் கூர

வெந்திற லாளி வெரீஇச் சந்தின்

பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ்

உருவ வெண்கோடு உயக்கொண்டு கழியும்

கடுங்கண் யானை காலுற ஒற்றலின்

கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு