26) வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் என்பது : தலைவியது நிலைமையினை அறிந்து கொள்ளத் தாயர் வெறியாட்டு நிகழ்த்தி வேலனை வினாவும் வழி, அதுகண்டு அஞ்சுதற் கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | நம்முறு துயரம் நோக்கி அன்னை |
| வேலற் றந்தந்தன ளாயின் வேலன் |
| வெறிகமழ் நாடன் கேண்மை |
| அறியுமோ தில்ல செறியெயிற் றோயே |
(ஐங்-241) |
எனவரும். |
27) குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் என்பது: தலைவன் தனது வரவுணர்த்த இயற்றும் செய்குறி அவனான் நிகழாமல் பிறிது ஏதுவாக நிகழ்ந்துழி ஒப்புமையான் அதனைத் தலைவன் செய்த குறியாகக் கருதிச் சென்று அது பொய்யாயினமையறிந்து உள்ளம் மயங்கி வருந்துமிடத்தும் என்றவாறு. என்றது, அல்ல குறிப்பட்டு வருந்துதல். |
இங்ஙனம் குறியின் ஒப்புமையான் மருள்தல் பெரும்பான்மையையும் இரவுக் குறிக்கண்ணே யாமெனக் கொள்க. |
| எ - டு : | அணிகடற் றண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட |
| மணியரவம் என்றெழுந்து போந்தேன்-கணிவிரும்பு |
| புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய் |
| உள்ளருகு நெஞ்சினேன் யான் |
(ஐந்-ஐம்.50) |
28) வரைவுதலைவரினும் என்பது : தலைவன் வரைதலை நேர்ந்தான் என அறிந்தவிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து |
| வானின் அருவி ததும்பக் கவினிய |
| நாடன் நயமுடையான் என்பதனான் நீப்பினும் |
| வாடல் மறந்தன தோள் |
(ஐந் - எழு - 2) |
29) களவறிவுறினும் என்பது : களவொழுக்கம் நற்றாய் முதலாய தமர்க்குப் புலனாய விடத்தும் என்றவாறு. |
| எ - டு : | நான்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து |
| மால்கடற் றிரையின் இழிதரும் அருவி |
| அகலிருங் கானத் தல்கணி நோக்கித் |
| தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல் |
| போதெழில் மழைகண் கலுழ்தலின் அன்னை |