டொழுகும் பான்மை பாராட்டத்தக்கது. உரைகாரர் கூறும் பிரிவுவகைகளை பிரிவெனப் பொதுவிற் கூறி வேண்டுவோர் வேண்டியாங்கு மாறிப் பொருள் கொள்ளுமாறு வைக்கமாட்டார். தானே வகைகளை விளக்காது தொகையை மட்டும் கூறுவது இலக்கண நூலார் மரபாகாது. அதனால் ஈண்டு ‘இருவகைப் பிரிவு’ என்னுந்தொடர் சுட்டும் வகையிரண்டும், இதனொடு தொடர்பு படத் தொல்காப்பியர் தாமே கூறியவாதல் வேண்டும் முதிர்வேனிப் பிரிவை முன் ஒன்பதாஞ் சூத்திரத்திலும் பின்பனியிலும் பிரிவுண்டென்பதைப் பத்தாஞ் சூத்திரத்திலும் கூறிய மைத்தாராதலின், இவ்விருவகைப் பிரிவு என இச்சூத்திரத்தில் அவற்றைந் தொகுத்துச் சுட்டினாரென்பதே பொருந்துவதாகும். காலிற்பிரிவும் கலத்திற் பிரிவுமென நச்சினார்க்கினியர் கூறுவதே தொல்காப்பியர் கருத்தென்பது அவர் சூத்திரங்களில் யாண்டும் சுட்டப்பெறாமையாலும் அஃது இங்குக் கருத்தன்மையறிக. |
இனி, இளம்பூரணர் கொள்கையும் அமைவுடைத்தன்று. “தலைமகளைப் பிரிதலும், அவளையுடன் கொண்டு தமர்வரைப் பிரிதலும்” என்று பிரிவிருவகைத்தாமென்பதிவர் கூற்று. இது தொல்காப்பியர் நூலில் யாண்டும் ஆதரவு பெறாததோடு, தலைமகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிதலையும் பாலையென்று பொருளொடு பொருந்தாப் பெயரிடும் இவர் பிழைக்குத் தொல்காப்பியரை யாட்டுபடுத்துவதுமாகும். பிரிவும், புணர்தலேபோல, தலைமகன் தலைக்கழிதலில் இவ்விவரும் தலைக்கூடித்தம் முட்பிரியாமல் ஒருங்கு செல்வராதலால், அஃதவர் காதற்றிணையில் பாலையாமாறில்லை. அவர் கூடியிருக்கவும் தலைவி தலைவனுடன் செல்லும் பொருட்டுத் தன் தமரைப்பிரிந்து செல்லல் பாலையெனில் தலைவியைக் காணவருந் தலைவன் தன் தமரையும் பாங்கரையும் பிரிந்து வரலும் பாலையாதல் வேண்டும் இவ்வாறு யார் யாரைப் பிரிந்தாலும் பாலையென்று கொள்ளுதற்கு இலக்கண நூலிடந்தராது. அகத்திணைகளனைத்தும் காதற்றலைமக்கள் தம்முள் நிகழும் அன்பொழுக்கம் பற்றியதேயாகு மன்றி, அவருள் ஒருவருக்கும் அயலவர்க்கும் இடைப்பட்ட ஒழுக்கத்தையும் தொடர்புகளையும் அட்டமாட்டா. ஆதலானும், காலத்தால் வேறுபட்ட பிரிவிரண்டையும் |