14. நீரறவிறந்த நீளிடைஎனவும் கள்ளியங்காடு எனவும் வந்தமையால் பாலை நிலமும், விசும்பில் விளங்கும் ஞாயிற்றின் கடுங்கதிர் தெறுதலின் என வந்ததால் முதுவேனிற்பொழுதும் ஆகிய முதற்பொருளும், செந்நாய், முருங்கை உழிஞ்சில் கள்ளி என்பனவற்றால் பாலைக்கருப்பொருளும் பொருள்வயிற் பிரிவாகிய உரிப்பொருளும் காண்க. |