பக்கம் எண் :

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை சூ 24189

கொடுங்கோல் உமணர் பகடுதெழி தெள்விளி
நெடும் பெருங் குன்றத் திமிழ்கொள வியம்புங்
கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல்
  
பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத்து
அருஞ்சுரக் கவலை அதர்படு மருங்கின்
நீழரை இலவத் தூழ்கழி பன்மலர்
விழவுத் தசைக்கொண்ட பழவிறன் மூதூர்
நெய்யுமிழ் சுடரிற் கால்பொரச் சில்கி
வைகுறு மீனில் தோன்றும்
மைபடு மால்வரை விளங்கிய சுரனே.” 
  

  (அகம்-17)
 

இஃது உடன்போக்கின்கண் வந்தது.15
  

“நாளு நாளு மாள்வினை யழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென
ஒண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே.” 
  

  (சிற்றட்டகம்)
 

இது பிரிவுப் பொருளாற் பாலையாயிற்று.16
  

“உயர்கரைக், கானியாற் றவிரறல் அகன்றுறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்

தொடலை தைஇய மடவரன் மகளே
  


15. நீரில் அத்தத்து  ஆரிடை,  அருஞ்சுரக்   கவலை   சுரன்  என  வந்தன  நிலமுதற்  பொருளையும்
கடுங்கதிர்  திருகிய  வேய்பயில் பிறங்கல் என வந்தது. முதுவேனிலாகிய பொழுது முதற் பொருளையும்,
கதிர்  திருகிய வேய்யாமரம் ஆகிய கருப்பொருளையும், ‘பந்தாடினும் கழங்காடினும் உடம்பு வருந்திற்று
என்று  கூறித்  தாயுடன்  அணையும்  மென்மையுடைய  மகள்,  தந்தை  காவலையும் நீங்கி அயலான்
ஒருவனுடன்   சுரத்தில்   நடக்க   வல்லமையுடையளோ’   எனத்  தாய் கூறலின் உடன் போக்காகிய உரிப் பொருளும் காண்க.
  

16. முதற்பொருளும் கருப்பொருளும் இன்றிப் பிரிவு உரிப்பொருளாற் பாலையாயிற்று