பக்கம் எண் :

190தொல்காப்பியம் - உரைவளம்

கண்ணினுங் கதவநின் முலையே
முலையினுங் கதவநின் தடமென் தோளே”.
  

(ஐங்குறு,361)
  

இது புணர்தற் பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று17
  

“சிலைவிற்     பகழிச் செந்துவ ராடை” (ஐங்குறு 363) என்னும் பாட்டினுள் “கொலைவி லெயினர்
தங்கை”   எனப்   புணர்தற்   பொருண்மை   வந்ததாயினும்  பாலைக்குரிய  மக்கட்பெயர்  கூறுதலிற்
பாலையாயிற்று. பிறவும் அன்ன.
  

மருதத்திணைக்குச் செய்யுள்
  

“சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
உரையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல்
பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுடை யருங்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரே.” 
  

  (அகம்-46)
 

இதனுள்   மருதத்திற்கு   ஒதிய   நிலனும்   பொழுதும்   கருப்பொருளும்  ஊடற் பொருண்மையும் வந்தன.
“தாமரை வண்டூது பனிமல  


17. கான்யாற்று   அவிரறல்   அகன்துறை   என்றது  பாலைக் கருப்பொருள் பின்னுள்ளன. புணர்ச்சியுன்
மகிழ்தல் உரிப்பொருள்.