பக்கம் எண் :

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை சூ 24191

ராருமூர” என்றமையான் வைகறை வந்தமை அறிக18.
  

“பூங்கொடி மருங்கின் எங்கை கேண்மை
முன்னும் பின்னும் ஆகி
இன்னும் பாணன் எம்வயி னானே.”

  

இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று.
  

“ஒரே ஆயம் அறிய ஊரன்
நல்கினன் தந்த நறும்பூந் தண்தழை
மாறுபடின் எவனோ தோழி வீறுசிறந்து
நெடுமொழி விளங்குந் தொல்குடி
வடுநாம் படுதல் அஞ்சுதும் எனவே.”

  

இது புணர்தற் பொருண்மையேனும், திணைநிலைப் பெயரால் மருதமாயிற்று.19 பிறவும் அன்ன.
  

நெய்தல் திணைக்குச் செய்யுள்
  

“கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர
அசைவண் டார்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சங் கையறுபு இனையத்
துயரஞ் செய்துநம் அருளா ராயினும்
அறாஅ லியரோ வவருடைக் கேண்மை
அளியின் மையின் அவணுறை முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
  


18. “ஊர!  ஒருத்தியைத்  தந்து  எம்மனையில்  வதுவை  அயர்ந்தனை  என்று  யாம் கூறேம். நின்னைப்
புலக்க யாங்கள் யார்” என்றலின் ஊடலாகிய உரிப்பொருளும் வேற்றுநிலை, நீர்முதிர்பழனம் என்றலின்
கருப்பொருளும்  வண்டு ஊதும்  தாமரையாகிய  பனிமலர் என்றதால் தாமரை விரிய வண்டு ஊதுவது
வைகறையில் ஆதலின் வைகறைச் சிறுபொழுதும் காண்க.  
 

19. ஊரன் என்பது மருதநிலைக் கிளவித் தலைவன் பெயர் அதனால் இச்செய்யுள் மருதமாயிற்று.