பக்கம் எண் :

192தொல்காப்பியம் - உரைவளம்

வெண்ணெல் லரிஞர் பின்றைத் ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
அகமடற் சேக்குந் துறைவன்
இன்துயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே” 
  

  (அகம் 40)
 

இது முதலும் கருவும் இரங்குதற் பொருண்மையும் வந்த நெய்தற்பாட்டு.20
  

“அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
ஏதின் மாக்களும் நோவர் தோழி
என்றும் நோவார் இல்லைத்
தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே.”

  

இது திணைநிலைப்பெயரானும் 21இரங்கற்பொருண்மையானும் நெய்தலாயிற்று.
  

“கங்குலும் பகலுங் கலந்துக ஒன்றி
வன்புறை சொல்லி நீத்தோர்
அன்புறு செய்தி உடையரோ மற்றே.”

  

  

இஃது இரங்கற்பொருண்மையான் நெய்தலாயிற்று.
  

“சுறவுப்பிறழ் இருங்கழி நீந்தி வைகலும்
இரவுக்குறிக் கொண்கனும் வந்தனன்
விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே.”    (சிற்றட்டகம்)
  


20. கானல்  பெருங்கடல்  எனநில  முதற்பொருளும் கழிப்பூ புன்னைமீன் எனக் கருப்பொருளும், காண்க. துறைவன்   என   நெய்தல்   திணை  நிலைப்   பெயர்காண்க.   துறைவன்  மார்பிற்  சென்ற  என்
நெஞ்சம்.  அவர் நம்மைத் துயரம் செய்து அருளாராயினும் அவர்பால் கொண்ட கேண்மை அறாதாகுக;
அவரிடம் இரக்கம் இன்மை கண்டு மீண்டு வராததாகுக” என இரங்குதல் உரிப்பொருள்.
  

21. சேர்ப்பன் - நெய்தல் திணை நிலைப்பெயர்.