இது, புணர்தற்பொருளாயினும் திலத்தான் 22நெய்தலாயிற்று. |
“கோட்டக மலர்ந்த கொழுங்கொடி அடம்பின் நற்றுறை 23அணிநீர்ச் சேர்ப்பஇப் பொற்றொடி அரிவையைப் போற்றினை அளிமே.” |
இது பாலைக்குரித்தாகிய பிரிவு நிமித்தமாயினும் நிலத்தான் நெய்தலாயிற்று. |
நச்சினார்க்கினியர் |
|
24. ஏனோர் பாங்கினு..............பெயரே. |
இது முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணை தொறு மரீஇய பெயருடையோரிலுந் திணைநிலைப் பெயராகிய தலை மக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள்:- ஏனோர் பாங்கினுந் திணைநிலைப் பெயர் எண்ணுங் காலை ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும்1 உரியராகக் கூறிய மக்கள் கூற்றினும் வருந் தலைமக்கள் பெயரை ஆராயுங் காலத்து, ஆனாவகைய - அவை பெரும் பான்மையாகிய கூறுபாட்டினையுடைய என்றவாறு. |
உதாரணம் :- |
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவி லெயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே யணங்கென நினையுமென் ணைங்குறு நெஞ்சே” |
(ஐங்குறு-363) |
|
22. சுறவுப்பிறழ் இருங்கழி என நெய்தல் நிலம் வந்ததால். |
23. அணி நீர்ச்சேர்ப்பு என்பதால் நெய்தல்நிலம். சேர்ப்ப என்பதால் திணைநிலைப் பெயரும் அடம்பு என்னும் கொடியால் கருப்பொருளும் காண்க. நிலத்தானும் கருப்பொருளானும் என்றிருப்பின் நன்று. |
1. மருதம் விடுபட்டது. காரணம் பின்னர்க் கூறுவர் |