பக்கம் எண் :

216தொல்காப்பியம் - உரைவளம்

பெருகும் இல்வாழ்க்கை பரத்தையிற் பிரிதல்
செருவினுக்கு உற்றுழிச் செல்வ துடனே
பொருவில் புரத்தலின் பொருள் வயிற் பிரிதல்
தூதில் பிரிதல் சுருதி முதலிய
ஓதப் பிரிதலொடு ஓர்ஏழ் என்ப
கிளந்த கற்பின் கிளவித் தொகையே.
  

முத்து. அக.43
  

இருபிறப் பாளர் இறைவர்என் றிருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித் தாகும்.
  

இளம்பூரணர்
  

27. ஓதல் பகையே.............பிரிவே.
  

மேல்    கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்தினார்,   அவற்றுள்   நிலம் பகுக்கப்பட்ட முல்லை
குறிஞ்சி  மருதம்   நெய்தல்    என்னும் நான்கு திணையும் களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும்
நிகழ்தலின்   அவற்றை    யொழித்து   நிலம்  பகுக்கப்படாத  கைக்கிளை  பெருந்திணையும்  பாலையும்
இவ்வோத்தினுள்     உணர்த்துகின்றன  ராதலின்,  அவற்றுள்  பாலைக் குரித்தாகிய பிரிவு உணர்த்துவான்
பிரிவுக்கு நிமித்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)   ஓதல்  பகை   தூது  இவை  பிரிவு  -  ஒதலும்  பகையும்  தூதும்  என்று  சொல்லப்பட்ட
இத்தன்மைய பிரிவிற்கு நிமித்தமாம்.
  

‘இவை’     என்பது   இத்தன்மைய   என்னும் பொருள்பட நின்றது. நிமித்தம் என்பது உய்த்துணர்ந்து
கொள்ளக்கிடந்தது1  ஓதற்குப்  பிரிதலாவது,  தமது   நாட்டகத்து வழங்காது பிறநாட்டகத்து வழங்கும் நூல்
உளவன்றே, அவற்றினைக்  


1. சூத்திரத்து  நிமித்தம்  என்பது  இன்மையின்   இவ்வாறு   எழுதினார்.   நிமித்தம் என்பது புணர்தல்
நிமித்தம்  போலப்  பாலை  நிமித்தம் என்னும் பொருளில் வந்ததன் காரணம் என்னும் பொருளளவில்
வந்தது. ஏன்எனின் இவை நிமித்தமாகா வகைகளாம் ஆதலின்.