தூதிடையிட்ட வகையினாலும், வேந்தற்கு உற்றுழியினானும் மாற்றோர் மேன்மையினானும் பாசறைக்கட் புலம்பல் எனக்கூட்டுக. அஃதாவது, தூதினும் வேந்தர்க்குற்றுழியினும் பகை தணிவினையினும் பாசறைக்கட் புலம்பல் உளதாகும் எனக் கொள்க. |
“வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குல் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித் தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து நுதிமுகம் மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா ஒண்மணி கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பத் தழங்குகுரல் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித்துறைச் செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத்துயில் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யோமே”. |
(அகம்-24) |
இது வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் கூற்று. |
“வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை யினச்சிதர் ஆர்ப்ப நெடுநல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் ஒதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக் கோழிணர் எதிரிய மரத்த கவினிக் காடணி கொண்ட காண்டகு பொழுதின் |