தடைஇய மென்தோளாய் கேட்டீவா யாயின் உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையும் கடவுளர் கண்தங்கி னேன்; சோலை: மலர்வேய்ந்த மான்பிணையன்னார் பலர்நீ கடவுண்மை கொண்டொழுகு வார்.” |
எனவும். |
“சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுத்தக்காய் தேறினென் சென்றீநீ செல்லா விடுவாயேல் நற்றார் அகலத்துக் கோர்சார மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும். முட்டுப்பா டாகலும் உண்டு.” |
(கலி-மரு.28) |
எனவும் புணர்ச்சிக்கு உடன்படாது கூறுதலானும், குறும்பூழ்ப்23 பாட்டினுள் |
“விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லாநின் பூழ்” |
என்றவழி மருதநிலத்தின் தலைமகனை விடலை என்றமையானும் |
இதனுள் |
“பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேள் அருள்இனி” |
(கலி.மரு-30) |
என இரந்தமையானும் கண்டு கொள்க. |
“ஒருஉக் கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிஇய எமக்குநீ யாரை பெரியார்க்கு அடியரோ ஆற்றா தவர்; கடியதமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று, வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருளவார் அகத்து; |
23 குறும்பூழ் - இக்காலத்துக் காடை எனப்படும் பறவை |