பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44333

ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்கண் எவனோ தவறு;
இஃதொத்தன், புள்ளிக் களவன் புணல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வானெயி றுற்றனவும்
ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும்
தவறாதல் சாலாவோ கூறு;
அதுதக்கது, வேற்றுமை எண்கண்ணோ ஓராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;
இனித்தேற்றேம் யாம்,
தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லள்
தார் மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீகூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு”

(கலி.மரு.23)
 

இதனுள் இரத்தலும் தெளித்தலும்24 வத்தவாறு கண்டு கொள்க.
  

கலித்தொகையிற்    கடவுட் பாட்டினுள் உரிப்பொருண்மை பற்றி  வரும்  பாட்டுக்களுள் மருத நிலத்துத்
தலைமகன்    பெயர்    கூறாது     பிறபெயர்    படக்    கோத்தமையானும்    ஊடற்பொருண்மையின்
வேறுபாடுண்மை25 அறிக.
  

‘உரைத்திறம்  நாட்டம்  கிழவோன்  மேன’  என்பது,  இவ்விவ்விடங்கள்  பற்றி  உரையாடுங் குறிப்புத்
தலைமகன் மேலன என்றவாறு.
  

நச்சினார்க்கினியர்
  

44. ஒன்றா......மேன
  

இஃது  உடன்  போக்கினுள்  நற்றாயுந்தோழியுங்  கண்டோருங்  கூறுவன  கூறித்  தலைவன் ஆண்டும்
பிராண்டுங்  


24 ‘ஆயிழாய்.........எவனோ தவறு என்பது இரத்தல் ‘வேற்றுமை......தெளிக்கு’ என்பது தெளித்தல்
  

25 ஊடலின் வேறுபட்டதுனி. (வெறுப்பு)