பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44335

முன்னத்தாற்2  றமர்    உணர்ந்து   வலிதிற்கொண்டு   அகன்றானோ  வென்று   கருதியும்  அவ்வரைவு
மாட்சிமைப்  படுத்தற்கும்3  பின்  சென்று  அவள்  பெயராமற் கற்பொடு  புணர்ந்தமை கண்டு  தலைவன்
எடுத்துக்  கொண்ட   வினைமுடித்தலும்   ஒருதலையென்றுணர்ந்து  பின்னர்   அவரும் போக்குடன்பட்டு
மீள்பவென்று  கொள்க.   அவ்வெளிப்பாடு  கற்பாதலிற் கற்பென்றார்.  உளப்படவென்றதனால்  வலித்தலும்
விடுத்தலும் அகப்பட வென்றாராயிற்று.
  

நாளது    சின்மையும்  இளமையது  அருமையும் தாளாண்  பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது
இளிவும்   உடைமையது    உயர்ச்சியும்   அன்பினது   அகலமும்  அகற்சியது   அருமையும்   ஒன்றாப்
பொருள்வையின் ஊக்கிய  பாலினும்-வாழ்க்கை  நாள்  சிலவாதல் ஏதுவாகப்  பொருள் செய்தல் குறித்தாரை
இளமையது   அருமை   இன்பத்தின்   கண்ணே   ஈர்த்து ஒன்றாமையும், மடியின்மை  ஏதுவாகப் பொருள்
செயல்    குறித்தாரையாதானும்    ஓர்    ஆற்றாற்   பொருள்   செய்யலாகாது   தத்தநிலைமைக்கேற்பச்
செயல்வேண்டு  மென்னுந்   தகுதியதமைதி   ஒன்றாமையும்,   இன்மையான் வரும்  இளிவரவு  நினைத்துப்
பொருள்  செய்ய   நினைந்தாரைப்   பொருளுடைமைக்  காலத்து நிகழும்  உயர்ச்சி அதற்கு இடையூராகிப்
பொருணைசையுள்ளதைத்  தடுத்து   ஒற்றாமையும்,   பிரிந்துழி   நிகழும்  அன்பினது அகலங்காரணமாகப்
பொருள்  செய்யக்  குறித்தாரைப்  பிரிவாற்றாமையிடைநின்று  தடுத்து ஒற்றாமையுமாய் ஒன்று ஒன்றனொடு
ஒன்றாது வரும் பொருட்டிறத்துப் பிரிதற்குத் தலைவன் உள்ளம் எடுத்த பகுதிக்கண்ணும்;
  

எனவே,     நாளது சின்மையுந் தாளாண் பக்கமும்  இன்மைய  திளிவும்  அன்பின  தகலமும் பொருள்
செயல்வகைப்பால ஆதலும்  இளமைய  தருமையுந்  தகுதிய  தமைதியும் உடைமைய  துயர்ச்சியும் அகற்சிய
தருமையும் இன்பத்தின் பால ஆதலுங் கூறினார்.   


2 முன்னத்தால் - குறிப்பால்
  

3 அப்பிரிவைச் சிறப்புடையதாக்குதற்கும் தமர் சென்றும் அவள் மீளாமை சிறப்புடையதாயிற்று.