பக்கம் எண் :

336தொல்காப்பியம் - உரைவளம்

இவ்வெட்டும்     பொருள் செயற்கு  ஒன்றாவென்னாமோ*  எனின்,  வாழ்நாள்   சிறிதென்று   உணர்ந்து
அதற்குள்ளே  பொருள்   செய்து  அறமும்  இன்பமும்  பெறுதற்குக்  கருதிய  வழி  ஆண்டு  முயற்சியும்
இன்மையால்  வரும்  இளிவரவும்  அதற்கு  ஒருப்படுத்துங்  கருவியாதலானும் பொருள் பின்பு அன்பிற்குப்
பெருக்கந்தருமாதலானும்   இந்நான்கும்   பொருள்  செய்தற்கு   வேண்டுமென   மறுக்க  இவ்வெட்டற்குந்
தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற்கண்டு கொள்க.4
  

“ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணு
தி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.”
  

(குறுந்-93)
 

இக்குறுந்தொகையுள்   இனமையதிளிவு    நெஞ்சிற்குக்   கூறியவாறு   காண்க.   பகுதியென்றதனானே,
தலைவன் பிரிவலெனக் கூறுவனவும் பிறவுங் கொள்க.
  

“இன்றே சென்று வருது நாளைக்
குன்றிழி யருவியின்........................”

(குறுந்-189)
 

எனவரும்.
  

இது குறுந்தொகை,
  

இவை வாணிகர்க்கே உரியன.
  

இனித்தலைவன் கூற்றினைத் தலைவியுந்தோழியுங்கொண்டு  கூறுவன  பெரும்பான்மை. அவையெல்லாம்5
நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே (தொல்-பொ-அக-44) என மேல்வருஞ் சூத்திரத்துட் காட்டுதும்.  


* என்பவர் இளம்பூரணர்
  

4 “அரும் பொருள் வேட்கையின்” (கலித்) என்பதில் தோழி கூற்றாக வந்துள்ளது.
  

5 லைவன்    நாளது    சின்மை   முதலிய   எட்டும்   கூறுவதும்   பிரிவில்   எனக்கூறுவதும்
ஆகியவற்றையெல்லாம் தோழியும் தலைவியும் கொண்டுகூறுவன.