பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44339

சூத்திரத்தான்     விலக்குவரெனின்,  அதற்கு  உம்மை  விரித்துக்  கிழவி   நிலையை  வினைசெய்யா
நிற்றலாகிய  இடத்து  நினைந்து  கூறினனாகக்  கூறார்13  வெற்றி   நிகழுமிடத்துந்  தான்  குறித்த பருவம்
வந்துழியுந் தூது கண்டுழியும் மூவருத்தம் விளக்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க.
  

முடிந்த     காலத்துப்  பாகனொடு  விரும்பிய வினைத்திற வகையினும் - வகையின் வினைத்திறமுமென
மாற்றுக.   வேந்தன்  எடுத்துக்கொண்ட   வினை   முடிந்த   காலத்துத்தான்   போக்கொருப்பட்டு  நின்று
பாகனொடு விரும்பிக் கூறிய வகையிட்டோன்றிய வேறொரு வினைத்திறத்திடத்தும்;
  

என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை.
  

காவற்பாங்கின்   பக்கமும்   -   வேந்தன்   றன்னாற்   காக்கப்படுவனவாகிய   பகுதிகளின்  கூற்றிற்
பிரியுமிடத்தும்;
  

பகுதி  ஆகுபெயர்;  அவை  யானை  குதிரை  முதலியவற்றைக்  காத்தலும்  அரசர்க்குத்  தருமமாகிய
வேட்டையிற் சென்று கடுமா கொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன.
  

ஆங்கோர் பக்கமும் - அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்;
  

அவர் தாபதர் முதலியோர் பலருமாம்.
   

பரத்தையின்    அகற்சியிற்  பிரித்தோட்   குறுகி  இரத்தலும்  தெளித்தலும்  என  இருவகையோடு -
பரத்தையிற்  பிரிதற்  காரணத்தாற்  பரிபுலம்  பெய்திய  தலைவியை  எய்தி  இரத்தலும்   இரந்த பின்னர்
ஊடலுணர்த்தலும்  என்ற  இரு  பகுதியோடே;  உரைத்திற   நாட்டம்   கிழவோன்   மேன - மேற்கூறிய
இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை நிலைபெறுத்தல் தலைமகனிடத்தனவாம் என்றவாறு.  


13 கூறார் இலக்கண நூலார் கூறார்.
கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக்காலத்துவிளங்கித் தோன்றும்-  (கற்பியில்15)