“ஆறுசெலல் வருத்தவுஞ் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைந்தே”. |
இது தோழியோடு வலித்தது. |
அப்பாற்பட்ட ஒருதிறத்தானும் என்றதனானே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவுங் கொள்க. |
“வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின சிதரார் செம்மல் தாஅய் மதரெழின் மாணிழை மகளிர் பூணுடை முலையின் முகைபிணி அவிழ்ந்த கோங்கமொ டசைஇநனை அதிரல் பரந்த அந்தன் பாதிரி உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ மராஅ மலரொடு வுராஅய்ப் பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் நயவரும் அம்ம கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற் பிடிமிடை களிற்றில் தோன்றுங் குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே” |
(அகம்-99) |
இவ்வகப்பாட்டு தலைவியை மயங்கிக் கூறியது1 |
“உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை வேனிற் பாதிரி விரைமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரன் மகளே |
1 பல பூக்களால் கானம் நன்று; நயவிரும் (விரும்பவரும்) பல குன்றும் உண்டு. ஆதலின் நாம் அவற்றைக்கண்டு கொண்டே சுரவழியைச் செல்லலாம் என மயங்கிக் கூறியது. |