பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44341

கண்ணினுங் கதவநின் முலையே
முலையினுங் கதவநின் றடமென் றோளே”.
  

(ஐங்குறு-391)
 

இவ்  வைங்குறுநூறு  உடன்  போயவழித்  தலைவன்  புகழ்ச்சிக்கு  நாணித்  தலைவி   கண்புதைத்துழி
அவன் கூறியது.
  

“அழிவிலர் முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தந் தீர யாழநின்
னலமென்பணைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
கணங்கணி வனமுலை யணங்கு கொளத் திமிரி
நிழல்காண் டோறு நெடிது வைகி
மணல்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயி லாலு
நறுந்தண் பொழில கானங்
குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே”.
  

(நற்றிணை-9)
 

எனவரும். இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழி வந்த நன்மைகூறி வருந்தாது ஏகென்றது. இது நற்றிணை.
  

பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
  

“இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉ
மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் யாரோ பெருங்க லாறே”.

   

இது விடுத்தற்கட் கூறியது.
  

“வினையமை பாவையி னியலி நுந்தை
மனைவரை யிறந்து வந்தனை யாயிற்
றலைநாட் கெதிரிய தண்பத வெழிலி
யணிமிகு கானத் தகன்புறம் பரந்த