பக்கம் எண் :

342தொல்காப்பியம் - உரைவளம்

கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி
யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவ
னுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே.”
  

(தற்றிணை-342)
 

இது நற்றிணை.
  

“நுமர்வரி னேர்ப்பி னல்ல தமர்வரின்
முந்நீர் மண்டில முழுது மாற்றா
தெரிகணை விடுத்தலோ விலனே
யரிமதர் மழைக் கண் கலுழ்வகை யெவனே.”
   

இவை தமர் தருவரென ஐயுற்றுக் கூறியன; அவர் வந்து கற்பொடு புணர்ந்தன வந்துழிக் காண்க.2
  

“அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் பெயர்த்தருங் காதலர்
வருவர்கொல் கயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி”

(கலி-11)
 

இதனுள் எனவென்றதனாற்3 றலைவன் கூற்றுப் பெற்றாம். இது மூன்றன் பகுதி.
   

“புகல்சால் சிறப்பிற் காதலி புலம்பத்
துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டூர்
நல்லேறு தழீஇய நாகுபெயர் காலை
  


2 கற்பொடு  புணர்ந்து  மீளாது  தலைவனுடன்  சென்றமைக்கும்  அது  கண்டுதமர்  மீண்டமைக்கும்
உதாரணம் வந்துழிக் காண்க.
  

3 தரும்   என்று  சொல்ல  எனவருவதால்  ‘அரிதாய.......தரும்’  என்னும்  கூற்றுத்தலைவனுடையது
என்பது பெற்றாம்.