பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44343

யுள்ளுதொறுங் கலுழு நெஞ்சம்
வல்லே யெம்மையும் வரவிழைத்தனையே”
  

(ஐங்குறு-445)
 

இது பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு4 தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது.
  

“முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை யருந்தொழி லுதவி நங்
காதலன் னாட்டுப் போதரும் பொழுதே”
  

(ஐங்குறு-446)
 

இது   வேந்தற்குற்றுழிப்   பிரிந்தோன்   பருவவரவின்கண்   உருவு   வெளிப்பட்டுழிப்    புலம்பியது.
உதவியென்றலின் வேந்தற் குற்றுழி யாயிற்று.
  

“வந்தாற்றான் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால்
வெந்தாற்போற் றோன்றுநீள் வேயத்தந்-தந்தார்
தரகக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறிந்த நோக்கு”
  

(திணைமாலை-நூற்-77)
 

இஃது  உருவு  வெளிப்பாடு.  நின்னொடு  போதுவே  னென்றவளை  ஆற்றுவித்தது.  திணைமாலையிற்
பாலை.
  

“நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென்
றிலங்கு நிலவி னிளம்பிறை போலக்
காண்குவெந் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுய ரரண்பல வௌவிய
  


4 நல்ல ஆனேற்றைத்தழுவிக் கன்று பெயரும் காலம் என்றதால் கார்ப்பருவம் பெறப்பட்டது.