மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.”5 |
(ஐங்குறு-443) |
இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் தான் குறித்த பருவத்து வினை முடியாமையிற் புலம்பியது. |
“முழங்குரன் முரசங் காலை யியம்பக் கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயற் கணைதுளி காரெதிர்ந் தன்றே யஞ்சி லோதியை யுள்ளுதொறுந் துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே.” |
(ஐங்குறு-448) |
இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப்பெறாது அரசன் செய்தியும் பருவத்தின் செய்தியுந்தன் செய்தியுங் கூறிப் புலம்பியது.6 இப்பாசறைப் புலம்பல் பத்தினுள்ளும் வேறுபாடு காண்க. தூதிற் பிரிந்துழிப் புலம்பின வந்துழிக் காண்க. |
“நீடின மென்று கொடுமை தூற்றிய வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந் தியாம்வெங் காதலி னோய்மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே.” |
(ஐங்குறு-478) |
இது தூதுகண்டு அவள் கூறிய திறங்கூறெனக் கேட்டது. |
5 வேந்து தொழில் முடிந்து விடின் என்றமையால் முடியாமை பெறப்பட்டது. |
6 வேந்தன் தொழில் எதிர்ந்தனன்-அரசன் செய்திகார் எதிர்ந்தன்று-பருவச்செய்தி துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனம்-தன்செய்தி. |