பக்கம் எண் :

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44345

“பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமொ டரும்பட ருழப்போள்
கையறு நெஞ்சத் துயவுத் துணையாகச்
சிறுவரைத் தங்குவை யாயிற்
காண்குவை மன்னாற பாணவெந் தேரே.”
  

(ஐங்குறு-477)
 

இது தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடுந்தலைவன் கூறியது.
  

“படுந்தடங்கட் பல்பணைபோல் லான்முழங்கன் மேலுங்
கொடுந்தடங்கட் கூற்றமின் னாக-நெடுந்தடங்க
ணீர்நின்ற நோக்கி னெடும் பணைமன் றோளாட்குத்
தேர்நின்ற தென்னாய் திரிந்து.”
  

(திணைமாலை நூற்-115)
 

இஃது இளையோரைத்7 தூதுவிட்டது.
  

“ஐய வாயின செய்யோள் கிளவி
கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென
நோய்நன்கு செய்தன் றெமக்கே
யாமுறு துயர மவ ளறியினோ நன்றே.”
  

(ஐங்குறு-441)
 

இது   வினைமுடியாமையிற்   பருவங்கண்டு   மீளப்பெறாத)   தலைவன்   தூதர்  வார்த்தை  கேட்டு
வருந்தியது. பிறவும் வேறுபட வருவன கொள்க.
  

“முரம்புகண் ணிடையத் திரியுந் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
யொண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே.”
  

(ஐங்குறு-449)
 

இது  வேந்தன்  திணைகொண்டு  மீள்வழித்  தானுந்  சமைந்ததேரை அழைத்துக்கொண்டு ‘திண்ணிதின்
மாண்டன்று தே’ ரெனப்பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறைவாங்காது வினை  


7 இச்செய்யுளில் இளையோர் என்றற்குக்குறிப்பு இல்லை.