பக்கம் எண் :

346தொல்காப்பியம் - உரைவளம்

சென்றானாகப்   பாகனை நோக்கிக்  கூறியது.8  இவை  ஐங்குறு நூறு, “மலைமிசைக்  குலைஇய” என்னும்
(84)  அகப்பாட்டும்  அது,  கலித்தொகையுட்  “புத்தி   யானை9   வந்தது   காண்பான்யான் றங்கினேன்”
(மருதக்கலி-32)  என்பன   முதலியவற்றான்  யானை முதலியவற்றையுங்,  கடவுட்பாட்டால்  (மருதக்கலி-28)
தாபதரையுங் காத்தற்குப் பிரிந்தே னெனக் கூறினானென்பது பெற்றாம்.
  

“ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்
தொடிய வெமக்குபீ யாரை பெரியார்க்
கடியரோ வாற்றா தவர்;
கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மற்று;
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின்
மாய மருள்வா ரகத்து;
ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா
வென்க ணெவனோ தவறு;
இஃதொத்தன், புள்ளிக்கள்வன் புணல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு
மொள்ளிதழ் சேர்ந்தநின் கண்ணியு நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் சாலாவோ கூறு;
அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;
இனித் தேற்றேம் யாந்
தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்
  


8 வேந்தன்   திறை   கொண்டு  மீள்வழி  என்றும்  அவ்வேந்தன்  திரை  வாங்காது  வினைமேற்
சென்றானாக என்றும் கூறப்படுதற்குரிய குறிப்புகள் மேற்செய்யுளில் இல்லை.
  

9 புத்தியானை - புதுயானை.