பொருள்:- ஒன்றாத்தமரினும் பருவத்தும், சுரத்தும் ஒன்றியமொழியோடு வலிப்பினும்-வரைவுடன்படாத சுற்றத்தோடும், பருவத்தின் கண்ணும், சுரத்திலும் ஏற்புடைச் சொல்லோடு தலைவியை உடன்கொண்டு செல்லத் துணியுமிடத்தும்; விடுப்பினும்-கொண்டு தலைக்கழியாமல் தலைவியைத்தான் விடுத்துப் பிரியுமிடத்தும்; இடைச்சுரமருங்கில் அவள்தமர் எய்தி - உடன்போக்கில் அரும் வழியினிடையே தலைவியின் தன்னையர் முதலிய சுற்றத்தாருற்று; கடைக்கொண்டு பெயர்தலில் - தலைவியைக் கொண்டு திரும்புமிடத்து கலங்கஞரெய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட - தலைவி மயங்கித் துன்பமெய்திக் கற்பால் தலைவன்பால் சேறலாலுளவாம் பூசலுட்பட; அப்பாற்பட்ட ஒரு திறத்தானும் - அத்தகைய (பல) பகுதிப்பட்ட ஒரு முறையானும்; நாளது சின்மையும் - வாழ்நாளின் சின்மையால் பொருள் வலித்தலும்; இளமைய தருமையும்-இன்ப நுகர்ச்சிக்குரிய இளமையின் அருமை (பொருட் பிணியை) நலித்தலும்; தாளாண் பக்கமும்-முயற்சியின் பெருமை கருதிப் பொருள் வலித்தலும்; தகுதிய தமைதியும்-தலைவியைப் பேணும் ஒப்புரவாண்மையறம் பொருட்பிணியை மெலித்தலும்; இன்மையதிளிவும்-இலம்பாட்டின் இழிவு கருதிப்பொருள் வலித்தலும் உடைமைய துயர்ச்சியும்-தனக்குக் கிடைத்திருக்கும் தலைவியின் காதலாகிய புத்துடைமைச்சிறப்பு பொருட்பிணியை மெலித்தலும்; அன்பின தகலமும்-தலைவிபால் அன்பின் பெருக்கால் அவள் பொருட்டுப் |