நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த் தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின்பெற வாரிடை யிறந்தன ளென்மி னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.” |
(ஐங்குறு-384) |
இவ் வைங்குறுநூறு ‘யான் போகின்றமை ஆயத்திற்கு உரைமின்’ என்றது. |
“கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க ணற்றோ ணயந்துபா ராட்டி யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.” |
(ஐங்குறு-385) |
இவ் வைங்குறுநூறு இன்றுயான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது. |
“கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ் சுரநனி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தனி ருரைமி னின்னகை முறுவலென் னாயத் தோர்க்கே.” |
(ஐங்குறு-397) |
இவ்வைங்குறுநூறு மீள்கின்றாளென்று என் வரவு ஆயத்தார்க்குக் கூறுமின் என்றது. |
“வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப் பரியல் வாழி தோழி பரியி னெல்லையி லிடும்பை தரூஉ நல்வரை நாடனொடு வந்த வாறே.” |
(ஐங்குறு-392) |
இவ் வைங்குறுநூறு மீண்டு வந்த தலைவி வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது. |