பக்கம் எண் :

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே சூ.45371

“அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் 
தேன்மயங்கு பாலினு மினிய வவர் நாட்
 
டுவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலுழி நீரே.”

(ஐங்குறு-203)
 

இஃது  உடன்  போய்  மீண்ட  தலைவி ‘நீ’ சென்ற நாட்டு நீர் இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தாயென்ற
தோழிக்குக் கூறியது.
 

“அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ  
வறனுண் டாயினு மறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற வருவிக்
கோள்வரு மென்னையை மறைத்த குன்றே.”
  

(ஐங்குறு-312)
 

இவ்  வைங்குறு  நூறு  ஐயன்மார்  வந்துழி  நிகழ்ந்தது என்னென்றது தோழிக்குத் தலைவி தலைவனை
மறைத்த மலையை வாழ்த்தியது. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
 

இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:
  

“மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி  
தான்வரு மென்ப தடமென் றோளி
யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப்
பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே.”
  
 

இனி அயலோர் கூற்று நிகழுமாறு:
  

“துரந்ததற் கொண்டு துயரடச் சாஅ  
யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி
யெவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மடமகள்
வெஞ்சின வெள்வேல் விடலைமுந் துறவே.”
  

(ஐங்குறு-393)

செய்யுளியலுட் ‘பார்ப்பான் பாங்கன்’  

(தொ பொ-செய்-190) ‘பாணன் கூத்தன்’

(தொ-பொ-செய்.191) என்னுஞ் சூத்திரங்களாற் பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க.