பாரதியார் |
45. எஞ்சி... ... ... இலவே |
கருத்து: இது, முன் சூத்திரங்களிற் கூறப் பெறாப்பிறரும் கூற்றுக் குரியராதல் உண்டு என்று எய்தாத தெய்துவிக்கிறது. |
பொருள்: எஞ்சியோர்க்கும்-இதுவரை குறித்துக் கூறப்படாத செவிலி, பாங்கர் ஆயத்தார், பரத்தையர், வாயிலாவார், பாகன், பாணன் போன்ற பிறர்க்கும்; எஞ்சுதலில்-அகத்துறைகளில் கூற்று ஒழிதல் இல்லை. |
குறிப்பு:-ஈற்றேகாரம் அசை. இவ்வியலில் தலைமகள் கூற்று தனித்துக் கூறப்படாதது சிந்திக்கத் தக்கது. உரையாசிரியர் இளம்பூரணர் ‘தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம், காலப் பழமையால், ஏடு பெயர்த்தெழுதுவார் வீழ எழுதினர் போலும்’ எனக்கூறி, தலைமகள் கூற்று வரும் பல இடங்களைச் சுட்டி விளக்கியுள்ளார். அகத்துறைப் பாட்டுகளில் தலைவி கூறுமிடங்கள் பலபடியாகப் பாராட்டப்படுதல் பண்டைப் பாட்டுகளில் பரக்கக் காணலாம். களவியல்-20, ஆம் சூத்திரத்தில் தலைவி கூற்று நிகழுமிடங்களைத் தொல்காப்பியரே கூறியுள்ளார். அவற்றுட் சில துறைகளுக்குச் செய்யுள் வருமாறு: |
1. ”காணுங்காற் காணேன் தவறாய, காணாக்காற் காணேன் தவறல் லவை”.1 |
(குறள்-1286) |
2. “உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண்”.2 |
(குறள்-1177) |
3. “புலப்ப லெனச்சென்றேன், புல்லினேன் நெஞ்சம் கலதீத லுறுவது கண்டு”3 |
(குறள்-1259) |
1,3 இவை தலைவனொடு புலவாமைக்குக் காரணம் யாது என வினவிய தோழிக்குத்தலைவி கூறியன. |
2 நின்கண் கலுழ்ந்தன என் என்ற தோழிக்குத் தலைவி கூறியது. |