“மன்ற மராத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப; யாவதும் கொடியோ ரல்லரெங் குன்றுகெழு நாடர்; பசைஇப் பசந்தன்று நுதலே, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.”4 |
(குறுந்-87) |
இனி, செவிலி கூற்றுக்குச் செய்யுள் : |
“முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇ குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”5 |
(குறுந்-167) |
“கானங் கோழி கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூரோளே மடந்தை; வேறூர் வேந்துவிடும் தொழிலொடு செலினும் சேந்துவர லறியாது செம்ம றேரே.”6 |
(குறுந்-242) |
பாங்கன் கூற்றிற்குச் செய்யுள்: |
“காமம் காம மென்ப, காமம் அணங்கும் பிணியு மன்றே; முதைச் சுவற் கலித்த முற்றா விளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம்; பெருந்தோ ளோயே”. |
(குறுந்-204) |
4 பிரியேள் எனச் சூளுற்ற தலைவன் பிரிதலின் தெய்வம் ஒறுக்கும் என நினைந்து தலைவி தோழியிடம் கூறியது. |
5 தலைவியின் மனையற மாண்புகண்டுவந்த செவிலி நற்றாய்க்குக் கூறியது. |
6 - |