இது தலை மகற்குப் பாங்கன் உரைத்தது7 |
“இடக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்கலாற் றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.” |
(குறுந்-58) |
இக் குறுந்தொகை (58 ஆம்) பாட்டு, கழறிக் கூறிய பாங்கற்குத் தலைவன் மாறிக் கூறுதலாம். |
ஆயத்தார் கூற்றுக்குச் செய்யுள்: |
“தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்தும் கையா றோம்பென ஓரை ஆயங் கூறக் கேட்டும்.” |
எனக் குறுந்தொகைச் (48) செய்யுளில் ஆயத்தின் கூற்று நிகழ்ந்தமை காண்க. |
பரத்தையர் கூற்றிற்குச் செய்யுள்: |
“கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி யாமஃ தயர்கஞ் சேறும், தானஃ தஞ்சுவ துடையளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.” |
(குறுந்-80) |
“கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மாமழை துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வ மணங்குக, தோழி! |
7 பாங்கன் கழறியது. |