பக்கம் எண் :

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே சூ.45375

மனையோண் மடைமையிற் புரக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.”

 

எனும் குறுந்தொகைச் (164) செய்யுள் காதற்பரத்தைதலை மகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.
 

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறுஉ மூரன்
பொற்கோ லவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறுமென்ப; தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன; அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.”

  

எனுங் குறுந்தொகைச் (364) செய்யுளில் இற்பரத்தை பாங்காயினார் கேட்பக் கூறியது காண்க.
  

“நகைநன் குடையன் பாண! நும் பெருமகன்
மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
யரண்பல கடந்த முரண்கொள் தானை
வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு
மன்னெயி லுடையோர் போல வஃதியா
மென்னலும் பரியலோ விலமெனத் தண்ணடைக்
கலிமா கடைஇ வந்தெஞ் சேரித்
தாருங் கண்ணியுங் காட்டி யொருமைய
நெஞ்சங் கொண்டமை விடுமோ வஞ்சக்
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கதம்பெரி துடையள்யா யழுங்கலோ விலளே.”

  

எனும் நற்றிணைச் (150) செய்யுளும் பரத்தை கூற்றாகும்.
  

பாகன் கூற்றிற்குச் செய்யுள்:
  

“விதையர் கொன்ற முதையற் பூழி
யிடுமுறை நிரப்பிய வீரிலை வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
யரலை யங்காட் டிரலையொடு வதியும்
புறவிற் றம்மநீ நயந்தோ ளூரே.