கற்பியலில் தலைமகன், தலைவி, தோழி, செவிலி, காமக்கிழத்தி, அறிவர், கூத்தர், இளையோர் ஆகியவர்களின் கூற்று நிகழ்கின்றன. |
கற்பொழுக்கத்தில் 33 சூழலில் தலைவனின் கூற்று நிகழ்கின்றன. அவை: 1. களவு காலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் கற்புக் காலத்தில் விடுபட்ட நிலையில், 2. மகிழ்ச்சி மிகுதியாக ஏற்பட்ட நிலையில், 3. தலைவியின் கற்புச் சிறப்பைக் கூறுமிடத்து, 4. தலைவியின் மணவாழ்க்கையைக் கூறுமிடத்து, 5. களவு வாழ்க்கையில் ஏற்பட்ட குறைகளை எடுத்துரைக்குமிடத்து, 6. தோழி ஏமுறு கடவுளை ஏத்துமிடத்து, 7. களவுக் காலத்தில் வருந்திய வருத்தம் தீர்ந்தது என்று கூறுமிடத்து, 8. தலைவியைப் புகழ்ந்துரைக்குமிடத்து, 9. பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுமிடத்து, 10. களவுக் காலச் சிறப்பை எடுத்துக் கூறுமிடத்து, 11. களவுக் காலக் குற்றங்களை மறந்துவிடுக என்று கூறுமிடத்து, 12. அழியல், அஞ்சல் என்று கூறிய கூற்றைப் பிழைத்த இடத்து, 13. தன்னுடைய குற்றங்களை உடன்பட்டுக் கூறுமிடத்து, 14. தலைவி முனிவர்க்கும் அந்தணர்க்கும் சிறப்புச் செய்யுமிடத்து, 15. பரத்தையின் ஊடலைத் தீர்க்கத் தலைவியை நாடியபோது, 16. தலைவியின் ஊடலைத் தீர்க்குமிடத்து, 17.பிரிவின் காரணமாகத் தலைவிக்கும் காமக்கிழத்திக்கும் ஏற்பட்ட வருத்தத்தை தீர்க்குமிடத்து, 18. பிரிவு ஏற்படுகையில் தலைவியின் அச்சத்தைத் தீர்க்குமிடத்து, 19. பிரிவில் ஏற்பட்ட வருத்தத்தைத் மீண்டும் அனுபவிக்குமிடத்து, 20. பொருளை விட காமம் வலிமையுடையது என்று கூறுமிடத்து, 21. பிரிந்த பிறகு தலைவியின் உயிரைக் குறித்து அஞ்சிய இடத்து, 22. பிரியேன் என்ற சொல்லைப் பிழைத்தவிடத்து, 23. தானும் உடன் வருவேன் என்று தலைவி கூறுமிடத்து, 24. மடமையால் தோழி கூறிய இடத்து, 25. பிரியக் கருதிய போது ஏற்பட்ட துன்பத்தின் போது, 26. பிரிந்து மீண்டு வந்த விடத்து, 27. மீண்டு வரும் போது சிறப்புக் கண்ட இடத்து, 28. அப்போது பாகனிடம் கூறுமிடத்து, 29. மீண்டு வந்த பிறகு தலைவியும் காமக்கிழத்தியும் உசாவியவிடத்து, 30. சென்ற இடத்தில் ஏற்பட்ட வருந்திய வருத்தத்தைக் கூறுமிடத்து, 31. வினை முடிந்து திரும்பிய பிறகு |