“கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின் புலந்தாயு நீயாயின் பொய்யானே வெல்குவை இலங்குதாழ் அருவியோ டணிகொண்ட நின்மலைச் சிலம்புபோற் கூறுவகூறும் இலங்கேர் எல்வளை இவளுடைய நோயே”1 |
(கலித் - 46) |
இது களவு. |
நச் |
இது, முன்னர்த் தலைவன் புலக்குமென்றார். அவ்விடத்துந் தோழியே கூற்று நிகழ்த்துதற்கு உரியளென்கிறது. |
இதன் பொருள்: புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் தலைவன் தலைவியையுந் தோழியையும் அச்சுறுத்துதற்குச் செய்கையாகச் செய்து கொண்டு2 புலத்தலும் அது நீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்திய வழியும், சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய - சொல்லத்தகும். பணிமொழி தோழிக்கு உரிய என்றவாறு, |
எனவே, தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெறாளென்றவாறு, எனவே பாடாண்திணைக் கைக்கிளையாயின் தலைவி கூறவும் பெறுமென்று கொள்க. உம்மை சிறப்பும்மை. |
உதாரணம் |
“தாயுயிர் வேண்டிக் கூருகிரலவன் அரிதின்று பரிக்கு மூரயாவதும் அன்பு முதலுறுத்த காதல் |
1 பொருள் : தலைவ! நின்னொடு கலந்ததனால் வந்த காமநோய் இவட்கு மிகுதிப்பட அதுகண்டு கண்துயிலாத என்னை நீ வெறுத்தாய் என்றால் அது கிடக்க; எதிர்நின்று கூறுவதையே எதிரொலிக்கும் நின்மலை போல நீ கூறுவதையே கூறுகின்ற இந்த ஒளி வளையலையுடையாள் கொண்ட நோயைப் பொய் கூறியாயினும் வென்று போக்குவாயாக. நீ உரைத்ததே இவட்கு உரையாகும். 2 செய்கையாகச் செய்து கொண்டு - செயற்கையாக வருவித்துக் கொண்டு. |