கற்பியல் சூ.17225
 

தலைவியின் வேற்றுமைச் சொல்
 

157.

அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி
அகமலி யூடல் அகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.
 

(18)

இளம்
 

இது தலைவிக்குரியதோர் மரபுணர்த்திற்று.
 

இ-ள்:  தலைவன்  குறிப்பறிதல்  வேண்டியும்  தலைவி  தனது  அகமலிந்த  ஊடல்  நீக்குமிடத்தினும்
வேற்றுமைக் கிளவி1 தோற்றவும் பெறும் என்றவாறு.
 

“யாரிவன் என் கூந்தல் கொள்வான்”

(கலி - 83)
 

எனவும்,
 

“யாரையோ எம்மில் புகுதருவாய்”

(கலி - 98)
 

எனவும் கூறியவாறு காண்க.
 

நச்
 

இது,   தலைவிக்கு ஆவதோர்   இலக்கணம் உணர்த்துகின்றது. இதன் பொருள்: அவன் குறிப்பு அறிதல்
வேண்டியும்-தோழி   அன்பிலை    கொடியையெனக்    கேட்ட    தலைவன்   முனிந்த   உள்ளத்தனாங்
கொல்லோவென ஐயுற்று அவனது குறிப்பை அறிதல் வேண்டியும்,  அகன்மலி  ஊடல்  அகற்சிக்  கண்ணும்
தனது  நெஞ்சில்  நிறைந்து  நின்ற  ஊடல்  கையிகந்து   துனியாகிய   வழி   இஃது   அவற்கு எவனாங்
கொல்லென  அஞ்சிய   வழியும்,. கிழவி வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறும் - தலைவி   தலைவனோடு
அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும் என்றவாறு.
 

உதாரணம்
  

“நன்னலந் தொலைய நலமிகச்சாஅ
யின்னுயிர் கழியினுமுரைய லவர்நமக்


1 வேற்றுமைக்  கிளவி  - தன்னிடத்துக் கொண்டிருந்த அன்பு வேறுபட்டார் என்பதைக் குறிக்கும் சொல்.
தனக்கு உறவினனன்றி வேறுபட்டவன் என்பதைக் குறிக்கும் சொல் எனவும் கொள்ளலாம்.