226தொல்காப்பியம் - உரைவளம்
 

கன்னையு மத்தனு மல்லரோதோழி
புல்லிய தெவனோவன்பிலங் கடையே”
1

(குறுந்-93)
 

இதனுள்  அவரை  அன்பிலை  கொடியையென்னாதி அன்பில்   வழி நின் புலவி அவரை என் செய்யும்.
அவர் நமக்கு இன்றியமையாத எமரல்லரோவென இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க.
 

தலைவனின் பணிந்த மொழி
 

158.

காமக் கடப்பினுட் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவோற் குரித்தே
வழிபடு கிழமை அவட்கிய லான.
 

(19)

இளம்
 

இது, தலைமகற் குரியதோர் மரபுணர்த்திற்று
இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும்2.
 

உதாரணம்
 

“ஒரூஉ, கொடியில் நல்லார் குரல் நாற்றத்துற்ற”
 

என்னும் மருதக் கலியுள்,
 

“பெரியார்க் கடியரோ ஆற்றாதவர்”
 

எனத் தலைவி கூறியவழி,
 

“கடியாதமக் கியார்சொலத் தக்கார் மாற்று”3

(கலி - 88)
 

எனவரும்.


1 பொருள்: பக்கம் 94ல் காண்க.

2 பொருள்:  தலைவனைப்   பணிந்த மொழியால் வழி படுதல் உரிமை எக்காலத்தும் தலைவிக்கு இயல்பு
ஆகலான்  காமம்   கையிகந்த   காலத்துட்   பணிந்தமொழியாற்   கூறுதல்   ஆராயும்   காலத்துத்
தலைமகனுக்கேயுரியதாகும். பணிந்தமொழி-தன்னைத் தாழ்த்திக் கொண்டு கூறும் சொல்.

3 பொருள்: பிரிய   வல்ல  பெரியோர்க்குப்  பிரிவாற்றாதவர்  அடியரோ? அன்றே என்றாள் தலைவி.
அதற்குத் தலைவன் கடியவர் தமக்குப் பதில் சொல்லத் தக்கவர் யாரிருப்பர் என்றான்.