கற்பியல் சூ.18227
 

நச்
 

இது   தலைவி   வேற்றுமைக்   கிளவி   தோற்றிய   பின்னர்த்  தலைவற்கு  உரியதோர்  இலக்கணங்
கூறுகின்றது.
 

இதன் பொருள்: காமக்   கடப்பினுட்   பணிந்த கிளவி-அங்ஙனந் தலைவி  கண்ணுந் தோழி  கண்ணும்
வேறுபாடு கண்டுழித்    தனக்குக்   காமங்கையிகந்துழித் தாழ்ந்து கூறுங்கூற்று.  காணுங் காலை  கிழவோற்கு
உரித்தே-ஆராயுங்   காலத்துத்    தலைவற்கு  உரித்து;  வழிபடு   கிழமை   அவட்கு   இயலான-அவனை
எஞ்ஞான்றும்-வழிபட்டொழுகுதல்    தலைவிக்கு  இல்லறத்தோடுபட்ட இயல்பாகலான் என்றவாறு.
 

உதாரணம்
 

“ஆயிழாய், நின்கண் பெறினல்லாவின்னுயிர் வாழ்க்கல்லா
வென்கணெவனோ தவறு”

(கலி-88)
 

“கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று”

(கலி - 88)
 

“நின்னாணை கடக்கிற்பாரியார்”.

(கலி - 81)
 
என்றாற்போல்வன கொள்க.
 

‘காணுங்காலை’  என்றதனால்   தலைவன்  தலைவியெதிர்  புலப்பது, தன்றவறு சிறிதாகிய இடத்தெனவும்
இங்ஙனம் பணிவது தன்றவறு பெரியதாகிய இடத்தெனவுங் கொள்க.
 

சிவ
 

தலைவனை     வழிபட்டுப்  பணிந்தமொழி  கூறுதல் என்பது தலைவிக்கு எப்போதும் இயல்பு ஆதலின்
காமக்  கடப்பினுள்   பணிந்தமொழி  கூறுவள்   என்பது   சிறப்பின்று.   ஆதலின்  தலைவன்  கூறுதலே
சிறப்புடைத்து என்பது இச்சூத்திரக் கருத்து.
 

தலைவியின் அன்புபொதி கிளவி
 

159.

அருண்முந் துறுத்த அன்புபொதி1 கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே.

(20)

1 அன்புபொதி  கிளவி  -  அன்பானது  வெளிப்படையாகக்  தோன்றாதபடி  உள்ளே  பொதிந்திருப்பச்
சொல்லும் சொல்.