228தொல்காப்பியம் - உரைவளம்
 

இளம்
 

இது தலைமகட் குரியதோர் இயல்புணர்த்திற்று.
 

(இ-ள்) பொருள்பட மொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல்.
 

உதாரணம் வந்தவழிக் காண்க.
 

நச்
 

இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென்கின்றது.
 

இதன்  பொருள்:  அருள்  முந்துறுத்த  அன்புபொதி கிளவி-பிறர் அவலங் கண்டு அவலிக்கும் அருள்
முன்தோற்றுவித்த  அவ்வருள்   பிறத்தற்கு  ஏதுவாகி  எஞ்ஞான்றும்  அகத்து நிகழும் அன்பினைக் கரந்து
சொல்லுங்கிளவி,  பொருள்பட  மொழிதல் கிழவோட்கும்  உரித்தே - பணிந்தமொழி  தோற்றாது  வேறோர்
பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து என்றவாறு,
 

வேறு  பொருளாவது  தலைவன்  கூறியாங்குத்  தானும்  பணிந்து  கூறுவாள்.  பணியாதே  தன்நெஞ்சு
தன்னையுங் கை கடந்து அவன் ஏவலைச் செய்தென்றாற் போலக் கூறுதலுமாம்.
 

இது  ‘தன்வயிற் சுரத்துலு மவன்  வயின்வேட்டலும், எனப்  பொருளியனுள்  (205) வழுவமைத்தற்கு
இலக்கணம்.
 

‘இணையிரண்டு’ என்னும் மருதக்கலி (77)யுள்,
 

“மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்மன்
னோய் சேர்ந்த திறம்பண்ணு நின்பாணனெம்மனை

நீசேர்ந்த வில்வினாய் வாராமற்பெறு கற்பின்”
1

 

எனக் கூறிய தலைவ,


1 பொருள் :  தலைவ!   நின்பாணன்   நோதிறப் பண்ணை இசைத்து எம்மனைக்கண் வந்து நீ சென்று
சேர்ந்த  பரத்தையர்  மனை யாது  என  எம்மை  வினாவி  வாரானாயை  யான்  பெறுவானேனால்
நீலமணியை யிகழ்ந்து பேசும் கூந்தல் மலரில்  வண்டுகள் மொய்க்கும்படியாக  அழகைப்  பெறுவதை
யான்வேண்டேன். அதனாற் பயனென்? பாணன் அவ்வாறு வினவாதிரானே.