சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுந் தலைவன் காமச் சிறப்புக் காண்க. |
வாயில்கட்கில்லாதது |
163. | மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமையைத் தம்முள வாதல் வாயில்கட் கில்லை. | (24) |
இளம் |
என் - எனின் வாயில்கட் குரியதோர் மரபுணர்த்திற்று. |
(இ-ள்) மனைவி மாட்டுக் கிழவோன் கொடு மையைத் தாங்கார் கூறல் வாயில்கட்கில்லை யென்றவாறு. |
நச் |
இது வாயில்கட்கு உரிய இலக்கணங் கூறுகின்றது. |
இதன்பொருள் : - மனைவி தாட்டலை - தலைவி எத்திறத் தானும் புலந்துழி அவளிடத்து கிழவோன் கொடுமை - தலைவன் கொடுந்தொழில்களை, தம் உள ஆதல் - தம் உரைக்கண் உள வாக்கி உரைத்தல். வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில்களுக்கில்லை என்றவாறு. |
தாட்டலையென மாறுக, அது பாதத்திடத் தென்னுந் தகுதிச் சொல், அது வாயில்கள் கூற்றாய் வந்தது. உதாரணம் வந்துழிக் காண்க. |
வாயில்கட்குள்ள தொன்று |
164. | மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே. | (25) |
இளம் |
என்-எனின், இதுவுமது. |
(இ-ள்) மனைவி முன்னர்ச் செயலற்றுக் கூறுஞ் சொல் மனைவிக்கு உறுதியுள்வழி வாயில்கட்கு உண்டு என்றவாறு. |