236தொல்காப்பியம் - உரைவளம்
 

இதனுள்,    என்னறியாமையாலே   அன்னாய் நின்னையஞ்சியாங் - கள்வன்    துணங்கையாடுங் களவைக்
கையகப்படுப்பேமாகச்  செல்லா    நிற்க,  அவன்  குழை  முதலியவற்றை   உடையனாய்த் தெருவு முடிந்த
இடத்தே   எதிர்ப்பட்டானாக     அவ்வருளாமையின்   யாண்டையது     என்கட்  பசலை  யென்றானாக,
அவனெதிரே  என் சிறுமை   பெரிதாகலான் ஆராயாதே துணிந்து நாணிலை  எலுவ. வந்தேனெனத் தோழி
மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்தவாறு காண்க. ஏனைய வாயில்கள் கூற்று வந்துழிக் காண்க.
 

இங்ஙனந்  தலைவன்  சிறைப்புறமாகக்  கூறுவன   ‘அன்பு  தலைப்  பிரிந்த  கிளவி  தோன்றின’ (179)
என்புழிக் கூறுதும்.
 

முன்னிலைப் புறமொழி
 

165.

முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்.
 

(26)

இளம்
 

இதுவுமது.
 

இ-ள்   :  முன்னிலைப்  புறமொழியாகக்  கூறுஞ்  சொல்  எல்லா  வாயில்கட்கும்  உரிய.  பின்னிலை
முயலுங்கால் தோன்றும் என்றவாறு.*
 

முன்னிலைப்  புறமொழியாவது  முன்னிலையாக  நிற்பாரைக்  குறித்துப்  பிறனைக்  கூறுமாறு  போலக்
கூறுதல்.


சென்று     பிறரொடு   விழாவயரும்போது   அவனைக்  கையகப்படுத்தக் கருதி யான் செல்ல நமக்கு
அயலானாகிய  அவன் நெடுவழி  முடிவுபெறும் இடத்து எதிர் வந்துமோத உடனே அவனை நின்னைக்
கேட்பார் இலரோ என்று யான்கூற அதைக் கேளாதான்போல என்னிடத்துப் பசலை அழகியது என்றான்.
அதற்கு  யான்  எதிர்மொழி கொடுக்க எண்ணி பகைவரும் விரும்பும் தலைமையுடையன் அவன் எனக்
கருதாமல் அவனை வணங்காமல் எலுவ! நீ நாணம் உடையையல்லை எனக் கூறி வந்தேன்.

* முன்னிலைப்    புறமொழி  கூறல் என்பது ஒரு குறை வேண்டிப் பின்னின்று குழையும் காலத்து எல்லா
வாயில்களுக்கும் தோன்றும் என்பது.