238தொல்காப்பியம் - உரைவளம்
 

கூத்தர் கிளவி
  

166.

தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்
பல்லாற் றானும் ஊடலில் தகைத்தலும்
உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும்
ஏதுவின் உரைத்தலும் துணியக் காட்டலும்
1
அணிநிலை யுரைத்தலும் கூத்தர் மேன
*
 

(27)

பி. இ. நூ.
 

நம்பியகம் 97, இல. வி. 465.
 

செல்வம் வாழ்த்தலும் நல்லறிவு கொளுத்தலும்
கலனணி புரைத்தலும் காமநுகர் புணர்த்தலும்
புலவிமுதிர் காலைப் புலங்கொள ஏதுவின்
தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை
மேல்சென் றுணர்த்தலும் மீண்டு வர வுரைத்தலும்
கூற்றரு மரபின் கூத்தற் குரிய.

 

இளம்
 

என் - எனின், கூத்தர்க்குரிய திறங்கூறுதல் நுதலிற்று.
 

இ-ள் : தொல்லவை யுரைத்தலாவது - முன்புள்ளார் இவ்வாறு செய்வரெனக் கூறுதல்.
 

நுகர்ச்சி யேத்தலாவது - நுகர்ச்சியிவ்வாறு இனியதொன்றெனப் புகழ்தல்.


வோவியம்   அழியுமளவும்  அழியாதிருப்பது  போல.  நீயும்  தாது  தேடியுண்ணும்  பறவை  போல
தலைவியின்  நலனுண்டு  அதனைத் திருப்பித்  தருதலிருக்க  அது விட்டுப் பொருள் தேடுதலில் நின்
வேட்கை சென்றது என்றால்  ஏதிலாராகிய  யான் கூறுவது என்ன இருக்கிறது? இதில் தாயுயிர் தாவார்
என்பது முன்னிலைப் புறமொழி.

1 துணிவு காட்டலும் - பாடம்.

* இச் சூத்திரம் தலைவன் தலைவி  இருவரிடத்தும்   கூத்தர்க்குரிய  கிளவிகள்  கூறுவதாக இளம்பூரணர்
கொள்ள, நச்சினார்க்கினியர்  உறுதி  காட்டல்வரை  தலைவியைப் பற்றியன என்றும் பின்னர் உள்ளன
தலைவனைப்   பற்றியன என்றும் கொண்டார்.   ஆசிரியர்  இன்னாரைப்  பற்றியன  என  வரைந்து
கூறாமையின் இளம்பூரணர் கருத்தே ஏற்புடையதாம் என்பர் வெள்ளைவாரணனார்.