240தொல்காப்பியம் - உரைவளம்
 

கொள்க.  இந்நூல்    வழக்குஞ்    செய்யுளும்  பற்றி  நிகழ்தலின்,  இப்பொருண்  மேல்வரும் வழக்குரை1
உதாரணமாம்.
 

நச்
 

இது கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது.
 

இதன் பொருள்: தொல்லவை   உரைத்தலும் - முன்பே    மிக்கார்  இருவர்  இன்பம்   நுகர்ந்தவாறு
இதுவெனக்  கூறலும்  நுகர்ச்சி  ஏற்றலும்  -  நுமது  நுகர்ச்சி    அவரினுஞ்  சிறந்ததெனக்  கூறலும் பல்
ஆற்றானும்    ஊடலில்   தணித்தலும்   -   இல்லறக்    கிழமைக்கு   இயல்பன்றென்றாயினும்    இஃது
அன்பின்மையாமென்றாயினுங்    கூறித்   தலைவியை    ஊடலினின்று  மீட்டலும்  உறுதி  காட்டலும்  -
இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பநுகர்தலே நினைக்கும் பொருளென்றலும்.
 

இனிக்     கூறுவன தலைவற்குரிய;   அறிவு   மெய்  நிறுத்தலும்  புறத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ
கற்றறிந்த  அறிவு இனி மெய்யாக   வேண்டுமென்று அவனை  மெய்யறிவின்கண்ணே  நிறுத்தலும், ஏதுவின்
உணர்த்தலும் - இக் கழி காமத்தான் இழிவு   தலைவருமென்றதற்குக் காரணங்  கூறலும்,  துணிவு காட்டலும்
- அதற்கேற்பக் கழி காமத்தாற் கெட்டாரை   எடுத்துக்காட்டலும் அணி  நிலை  உரைத்தலும் - முலையினுந்
தோளினும்  முகத்தினும்  எழுதுங்காற்  புணர்ச்சி    தோறும்   அழித்தெழுதுமாறு   இதுவெனக்   கூறலும்,
கூத்தர்மேன இவ்வெட்டுங் கூத்தரிடத்தன என்றவாறு.
 

கூத்தர்  -  நாடக  சாலையர்.  தொன்றுபட்ட  நன்றுந்தீதுங் கற்றறிந்தவற்றை அவைக்கெல்லாம் அறியக்
காட்டுதற்கு உரியராகலிற் கூத்தர் இவையுங் கூறுபவென்றார். இலக்கியம் இக்காலத் திறந்தன.
 

“பொருட்பொருளார் புன்னலந் தோயா ருட்பொரு
ளாயு மறிவினவர்

(குறள் - 914)
  

இஃது, அறிவு மெய்ந்நிறுத்தது.


1 வழக்குரையும்  என   உம்மை   கொடுத்துக்   கூறுக   என்பர்   வெள்ளைவாரணனார்.   உம்மை
செய்யுளேயன்றி என்பதைக் குறிக்கும்.