கற்பியல் சூ.27241
 

கூத்தர் பாணர்
  

167.

நிலம்பெயர்ந் துரைத்தல் அவள்நிலை உரைத்தல்1
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய.
 
(28)

பி.இ.நூ.
 

நம்பியகம் 55
 

................... அவன் வயின்
செல்ல விரும்பலும் சென்றவற் குணர்த்தலும்
................... பாணற் குரிய.

 

இல. வி. 463
  

நம்பியகச் சூத்திரமே
 

இளம்
 

இது, மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல்லாத2 பாணர்க்கும் உரிய கிளவி உணர்த்திற்று.
  

(இ-ள்) நிலம்  பெயர்ந்துரைத்தல்    என்பது  -  தலைவன்  பிரிந்தவிடத்துச்  சென்று கூறுதல். அவள்3
நிலையுரைத்தல் என்பது - அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல்.
 

“அருந்தவ மாற்றியானுகர்ச்சி போல்” என்னும் பாலைக் கலியுள்,
 

“தணியாநோய் உழந்தானாத் தகையவள் தகைபெற
அணிகிளர் நெடுந்திண்தேர் அயர்மதி - பணிபுநின்
காமர் கழலடி சேரா
நாமஞ்சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே”
4

(கலித்-30)


1 வரைநிலை யுரைத்தல் - நச். பாடம்.

2 சொல்லாத - இன்னின்ன கிளவிகள் உரிய என முன்னர் வரையறுத்துச் சொல்லப் பெறாத.

3 அவள் - தலைவி

4 பொருள் : தணியாத  காமநோயால் உழந்து அமையாத தகுதியுடையளாகிய தலைவி நின் கழலடியைப்
பணிந்து