கற்பியல் சூ.31247
 

நச்.
 

இது முற்கூறியவற்றிற்கு உரியார் இங்ஙனஞ் சிறந்தாரென மேலதற்கோர் புறனடை.
 

இதன் பொருள் : உழைக்குறுந்  தொழிலும்காப்பும்    உயர்ந்தோர்க்கு நடக்கை எல்லாம்  அவரிடத்து
நின்று  கூறிய  தொழில்  செய்தலும் போற்றீடு முதலிய   பாதுகாவலும்  பிறவும்  உயர்ந்தோர்க்குச் செய்யுந்
தொழிற்பகுதியெல்லாம், அவர்கட்படும் - முற்கூறிய இளையோரிடத்து உண்டாம் என்றவாறு,
 

என    இவ்விரண்டற்குமுரியர்     அல்லாத    புறத்திணையர்    முற்கூறியவை   கூறப்பெறாரென்பது
பொருளாயிற்று.
  

தலைவன் செயல்
  

170.

பின்முறை யாகிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்
இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்
இறந்த துணைய கிழவோன் ஆங்கண்
கலங்கலும் உரியன் என்மனார் புலவர்.
 

(31)

இளம்.
  

இது, தலைமகற் குரியதோர் மரபுணர்த்திற்று.
 

உதாரணம்
 

“இம்மை உலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமும் மறுவின் றெய்துப
செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனந் தோழி
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்தேர் மாமணிகறங்கக் கடைகழிந்து
காண்டல் விருப்பமொடு தளர்பு தளர்போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காது