1 பொருள் : தோழீ! தார்மார்பனாகிய தலைவன் நேற்று ஒருத்தியோடு மணம் புணரவேண்டித் தன்னையணிகலன்களால் புனைந்தவனாய் இத்தெரு வழியே தேரிற் செல்வோனானான். அத்தேர் மணியோசை கேட்டுக் காணும் ஆசையோடு தளர் நடையிட்டு வந்த புதல்வனைப் பார்த்து, வலவனே தேரை நிறுத்து எனச் சொல்லி இழிந்து புதல்வனது செவ்வாய் தன் மார்பிற் புதையத் தழுவிப் பின்னர், ‘பெரும! வீட்டிற்குள் செல்’ என விடுக்க அவன் செல்லானாய் அழ, என்னைத் தடுத்த குபேரன் போலும் என அன்புச் சொல் கூறி மகனொடுதான் வீட்டிற் புகுந்தான்; உடனே நான்தான் அவ்வாறு புதல்வனைத் தடுக்கச் செய்தேன் என்று தலைவன் கொள்வானோ என நாணி உடனே இவரை (தலைவனை)த் தடுத்தான் போலும் இக் கொடியவன் என்று கூறி அடிக்கும் கோல் கொண்டு நெருங்க, உடனே மகனைத் தன்பால் அணைத்துக் கொண்டு பரத்தை மனையில் முழங்கும் முழவின் ஒலி வருக வருக எனத் தலைவனை அழைப்பது போல வந்து ஒலிக்கவும் நம் மனையை விட்டு நீங்கானாய் மனையிலேயே தங்கி விட்டானல்லனோ? அதனால் புதல்வர்ப் பெற்றோர் இம்மையுலகத்துப் புகழோடிருந்து மறுமையுலக இன்பமும் பெறுவர் என்று பலரும் உரைத்த பழமொழி உண்மையாதலை யான் வாய்த்தேன், |