கற்பியல் சூ.32253
 

ரணமாகக்    காட்டினார்   இளம்பூரணர்.  பாடல்   பொதுப்பட  இருத்தலின் இடத்துக்கேற்ப இரண்டற்கும்
கொள்ளலாம்.  ஆனால்    காமக்கிழத்தி  பற்றிக்    கூறிய இடத்தில் இப்பாடல் காட்டப்பட்டுக் கீழே “இது
காமக்கிழத்தியாகிய     தலைமகட்கு   முன்    வரையப்பட்ட  பரத்தை  கூற்று.”  என்பது  காணப்படுவது
பொருத்தமற்றது. காமக்கிழத்தி கூற்றுக்கூறுமிடத்துப் பரத்தை கூற்று என்பது பொருந்தாது.
 

இனி நச்சினார்க்கினியர் ‘தாய்போற் கழறி’ என்னும் இச்சூத்திரத்து வேறு பொருள் கொள்வர்.
 

“தலைவன்   தன்னொடு கூடிய கவவுக் காலத்தில் முன்னர்ப் பரத்தமை கொண்டதற்கு வருந்தியபோது,
மகனைக்  கழறும் தாய்போல இனி இவ்வாறு     நடவாதே; இவ்வாறு நடக்க என இடித்துரைத்து அவனைத்
தழுவிக் கொள்ளல் தலைவிக்கும் உரியது.”
 

என்பது    அவர்  உரை.  தாய்போல்    தழுவிக்  கோடல் என்பது  தலைவி  தலைவனைத்  தழுவிக்
கொள்ளுதல்  என்பதைக்  குறிப்பதாக    நச்சினார்க்கினியர்  கொண்டார். ‘கிழத்திக்கும்’  என்பதில் உள்ள
உம்மை  எதைத்  தழுவியது என்று   அவர் கூறவில்லை. உதாரணமும் காட்டவில்லை. நற்றிணைப்  பாடல்
அவர்க்கு ஏற்புடைத்தில்லைபோலும்.
 

இச்சூத்திரம்     தலைவி   புலவி கடைக் கொள்ளும் காலம்    உணர்த்துகின்றது என்பர் அவர். புலவி
கடைக்  கொள்ளுதல்    பல்வகைக்  காலங்களில்  நிகழும்   ஆதலினாலும்   அவற்றுள்  ஒன்று தலைவன்
தன்னிடம்    கூடித்      தன்    பரத்தமைக்கு   வருந்துதல்    ஆதலினாலும்    இளம்பூரணர்   கூறிய
‘தலைமகட்குரியதோர்    கிளவி  கூறுகின்றது’  என்பதையே    இச்சூத்திரம்   நுவலுதலாகக்  கொள்ளலாம்.
அக்கிளவி  தலைவியின் குணச் சிறப்பைக்  குறிப்பதாம். அச்சிறப்பு  தலைவனைப் புலவாது தழீஇக் கோடல்.
 

172.

அவன்சோர்பு காத்தல் கடன்எனப் படுதலின்
மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்
செல்வன் பணிமொழி யியல்பாகலான.
 

(33)

இளம்
 

இதுவும் தலைமகட்குரிய கிளவி யுணர்த்திற்று. மேலதற்கோர் புறனடை.