254தொல்காப்பியம் - உரைவளம்
 

(இ-ள்)    தலைமகனது சோர்வு காத்தல் தலைமகட்குக் கடனாகலால் தன்  மகனுக்குத்  தாயாகிய காமக்
கிழத்தியுயர்புந்   தன்னுயர்பாகும்.  இருவருந்  தலைமகன்  பணித்த   மொழி   கோடல்    இயல்பாகலான்
என்றவாறு.
  

சோர்வாவது     ஒழுக்கத்திற்  சோர்வு, அது பரத்தையிற்  பிரிவு,  அதனை  மறையாது   காமக்கிழத்தி
ஆற்றில்  தலைமகற்குக்   குறைபாடு   வரும்   என்பதனால்  அவனையுயர்த்தி யவ்வொழுக்கம்  பிறர்க்குப்
புலனாகாமையேற்றுக்   கோடல்   வேண்டுமெனக்  கூறுதலுந்   தனக்கு   இழிவு   ஆகாது   உயர்ச்சியாம்
என்றவாறு. இதுமேலதற்குக்1 காரணங் கூறிற்று.
 

நச்
 

இதுவுந் தலைவி குணச் சிறப்புக் கூறுகின்றது.
   

இதன்பொருள் :- அவன் சோர்பு காத்தல்  கடன் எனப்படுதலின்  தான்  நிகழ்த்துகின்ற  இல்லறத்தால்
தலைவற்கு  இழுக்கம்  பிறவாமற் பாதுகாத்தல்  தலைவிக்குக்  கடப்பாடென்று  கூறப்படுதலால்,  மகன் தாய்
உயர்பும்  தன்  உயர்பு  ஆகும்.  மகன்  தாயாகிய  மாற்றாளைத்   தன்னின்   இழிந்தாளாகக்    கருதாது
தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக்  கொண்டொழுகுதல் தனது  உயர்ச்சியாம். செல்வன்  பணிமொழி  இயல்பு
ஆகலான-தலைவன்   இவ்வாறொழுகுகவென்று   தமக்குப்   பணித்த   மொழி  நூலிலக்கணத்தான்  ஆன
மொழியாகலான் என்றவாறு.
   

ஈண்டு   ‘மகன்றாய்’  என்றது  பின்முறையாக்கிய  வதுவையாளை.  இன்னும்  அவன்  சோர்பு காத்தல்
தனக்குக்  கடனென்று கூறப்படுதலாலே  முன்முறையாக்கிய  வதுவையாளைத்  தம்மின்  உயர்ந்தாளென்றும்
வழிபாடாற்றுதலும்  பின்முறைவதுவையாளுக்கு  உயர்பாஞ்செல்வன்  பணித்த  மொழியாலென்றவாறு, ஈண்டு
‘மகன்றாய்’  என்றது  உயர்ந்தாளை. ‘உய்த்துக்  கொண்டுணர்தல், (666)  என்னுமுத்தியால்  இவையிரண்டும்
பொருள்.  ‘செல்வன்’  என்றார்   பன்மக்களையும்  தன்னாணை  வழியிலே  இருத்துந்  திருவுடைமைபற்றி.
இவை வந்த செய்யுட்கள் உய்த்துணர்க.
   

சிவ
  

இச்சூத்திரம்  காமக்கிழத்தியைத்  தாய் போல் தழீஇக் கோடற்குக் காரணமும் அதனால்  வரும் சிறப்பும்
உணர்த்துதல் நுதலிற்று.  


1 தாய்போற்கழறித் தழீஇக் கோடற்கு.